மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
Holiday announced for TASMAC liquor shops
இந்த மாதத்தில் வரும் 16, 26 மற்றும் பிப்ரவரி 01ந் தேதி ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை, 26-01-2026 அன்று குடியரசு தினம் (திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை) மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி தினத்தன்று மதுவகைகள் விற்பனை பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் இம்மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள்/விற்பனையாளர்கள்/உதவி விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.'' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Holiday announced for TASMAC liquor shops