ஆரணியில் பரபரப்பு.. உதயநிதியால் தீக்குளிக்க முயற்சி! பதறிப்போன காவல்துறை!
Hindu munnani executive attempt set fire on him against Udhayanithi
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி பேசியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை போன்று திமுக எம்.பி ஆ.ராசாவும் சனாதன தர்மம் குறித்து அவதூறாக பேசியதால் இருவர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதேபோன்று உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடுக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநரிடம் தமிழக பாஜக சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ கைது செய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முழுவதிலிருந்து பல்லாயிரக்கணக்கான இந்து முன்னணியினர் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது இந்து முன்னணி அமைப்பினர் திடீரென அமைச்சர் உதயநிதியின் உருவபொம்மையை எரிக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முனுகப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி கிளைச் செயலாளர் கணேசன் திடீரென அவரின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனால் பதறிப் போன காவல் துறையினர் அவரிடம் இருந்த தீப்பெட்டியை பரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மம் குறித்து அவதூறாக பேசியது மனதை புண்படுத்துவதால் தீக்குளிக்க முயன்றதாக கணேசன் தெரிவித்துள்ளார்.
English Summary
Hindu munnani executive attempt set fire on him against Udhayanithi