விடிய விடிய பெய்த மழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!
heavy rain Chennai planes unable land
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய ஹைதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 விமானங்கள் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் பறந்தபடியே சுற்றி திரிந்தன.

அதன் பிறகு வானிலை சற்று சீரானதும் விமானங்கள் ஒவ்வொன்றாக விமான நிலையத்தில் தரையிறங்கின.
இதே போல் சென்னையில் இருந்து டெல்லி, ஹைதராபாத் உள்ள இடம் 11 நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 20 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுகின்றன.
English Summary
heavy rain Chennai planes unable land