விடிய விடிய பெய்த கனமழை: 2 நாட்கள் மலைரெயில் போக்குவரத்து ரத்து! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்கிறது. 

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக 5 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மரங்கள், பெரிய பெரிய பாறைகள் போன்றவை தண்டவாளத்தில் விழுந்துள்ளதால் தண்டவாளம் முழுவதும் மூடிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட தயாராக இருந்த மலையரையில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. 

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண் சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சீரமைப்பு பணிக்கான காரணமாக இன்று நாளை என 2 நாட்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சீரமைக்கும் பணிகள் முடிவடைந்த உடன் மலை ரயில் சேவை தொடங்கும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain 2 days mountain railway transport cancellation 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->