மீண்டும் ஒரு தற்கொலையால் கோவையில் பரபரப்பு.!! போலீசார் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் துடியலூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளைக்கிணறு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்த விஜயராணிக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். நேற்று துடியலூர் ரயில் நிலையம் அருகே வந்த அவர் இரு சக்கர வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு மேட்டுப்பாளையம் கோவை பயணிகள் ரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறிப்பு கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் விஜயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியை பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.

கடந்த ஜூலை 7ம் தேதி கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது அலுவலகத்தில் மெய் காப்பாளராக பணியாற்றும் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அடங்குவதற்குள் தற்போது அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் தற்கொலை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Headmistress commits suicide in Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->