பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை - தீவிர விசாரணை நடத்தும் போலீசார்.!
harassment to woman doctor in kanniyakumari medical college hospital
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள், உள் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இதேபோல், தினமும் மருந்து வாங்குவதற்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவர், சக மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

மேலும், அந்த பெண் மருத்துவர் தனக்கு சக மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் இன்று ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு சென்று பயிற்சி மருத்துவர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
புகார் கூறப்பட்ட மருத்துவர், மருத்துவ கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா? என்பது குறித்த தகவல்களையும் போலீஸார் கேட்டறிந்தனர்.
English Summary
harassment to woman doctor in kanniyakumari medical college hospital