சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு கடிதம் வழங்கிய - சென்னை காவல் ஆணையர்!
Greater Chennai Police
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், 2022ம் ஆண்டு மாண்டஸ் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை சமயத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த காவலர் முதல் கூடுதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்ளுக்கு பாராட்டு கடிதங்கள் வழங்கினார்.
சென்னையில் கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள், இரயில்வே நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் என மொத்தம் 166 இடங்களில் "காவல் உதவி" செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. சென்னையிலுள்ள 12 நடை மேம்பாலங்கள் கண்காணிக்கப்பட்டது.
புனிததோமையர்மலை மற்றும் வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா, உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த கணவன் மனைவி உட்பட 6 நபர்கள் கைது. 2.45 கிலோ கஞ்சா, 120 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல்.
அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம்: 2018ம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதம் விதித்து கனம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

இரவு நேரத்தில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 22 நபர்களை சில மணி நேரங்களில் கைது செய்த மதுரவாயல் காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.
2019ம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டணையை பெற்றுத் தந்த தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.
வீட்டின் பீரோவை உடைத்து திருடிய நபரை 2 மணி நேரங்களில் கைது செய்து அவரிடமிருந்து 9 சவரன் தங்க நகைகள், வைரக்கல் பதித்த நெக்லஸ் மற்றும் பணம் ரூ.28,000/- ஆகியவற்றை பறிமுதல் செய்த விருகம்பாக்கம் காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், அவர்கள், மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் அறிவியல் சார்ந்த புலனாய்வு பிரிவின், காவல் உருவப்படம் (Scientific Aid Investigation/Police Portrait) பிரிவில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்ற சென்னை மத்திய குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலரை பாராட்டினார்.