‘நிசார்’ செயற்கைக்கோளை சுமந்தபடி நாளை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட்..! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.

ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் உள்ள 02-வது ஏவு தளத்தில் இருந்து நாளை மாலை 05.40 மணியளவில் ஏவப்படுகிறது. 

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் நாளை விண்ணில் பாயவுள்ளது.  அதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு செப்.30-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் பின்னர், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் நிசார் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன. அதன்படி, இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோளில் இரண்டு முக்கிய ரேடார் தொழில்நுட்பங்கள் உள்ளன. இவை இரண்டும் இணைந்து பூமியின் மேற்பரப்பை மிக விரிவாகவும், நுணுக்கத்துடன் படம் பிடித்து அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

அதாவது, 12 நாளுக்கு ஒருமுறை மொத்த பூமியையும் அங்குலம் அங்குலமாக நிசார் செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பும் என்றும், அத்துடன், பனிக்கட்டிகள் எவ்வாறு உருகுகின்றன மற்றும்  நிலச்சரிவுகள் எங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், வனப்பகுதிகள், பயிர் நிலங்களில் ஏற்படும் மாறுதல்கள், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஆகியவை குறித்து நிசார் செயற்கைக்கோள் ஆராயும் எனவும் கூறப்பட்டுள்ளது. பூமியில் நிகழும் இயற்கை இவ்வாறான மாற்றங்களை ஆராய்வதே நிசார் செயற்கைக்கோள் திட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.

அதேபோல் 05 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த நிசார் செயற்கை கோள் புவியில் இருந்து 743 கி.மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GSLV F16 rocket to launch tomorrow carrying Nisar satellite


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->