தலித் பாதுகாவலர் தளபதி... திருமா நெல்லை பக்கம் சென்றிட வேண்டாம் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "சாதிய படுகொலைகளை சகித்துக் கொள்ள சொல்கிறதா திமுக அரசு?

அந்த இளைஞன்,நல்ல வேலையில் இருந்தாலும் தங்கள் சாதியில் இல்லை என்று அவனை வெட்டிக் கொல்லும் அளவிற்கான துணிச்சல் கொலையாளிக்கு எங்கிருந்து வந்தது?
யார் அதனை தந்தது?

நெல்லையில் சாதிய வன்கொடுமைகளே இல்லை என்கிறார் அப்பாவு‌.

கொலைகள் சொந்த காரணங்களால் நடக்கிறது என்கிறார் அமைச்சர் ரகுபதி.

தங்கள் குடும்பத்தில்-நெருங்கிய உறவுகளில் ஒருவரை இழக்கும் வரை இந்த ஆட்சியாளர்கள் இவற்றை வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!

முதல்வரை வாழ்த்துவதற்காக
அடிக்கடி தலைமை செயலகம் சென்றாலும்
தலித் மக்களின் இன்னல்கள் தீர்ந்த பாடில்லை!

"தலித் மக்களின் பாதுகாவலர் அண்ணன் தளபதி தான்" எனக் கூறிக் கொண்டு தோழர் திருமா நெல்லை பக்கம் சென்றிட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Jayakumar Condemn to DMK Govt kavin case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->