`G-Pay’-ன் `அந்த’ Option-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி! ஏமாந்த 112 பேர்! மக்களே உஷார்!
Gpay fraud crime lovers kovai
ஜிபே பணப்பரிவர்த்தனை செயலியை பயன்படுத்தி, ‘ரெக்வெஸ்ட்’ வசதியின் மூலம் நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் சுகுணாபுரத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் அவரது மனைவி ஷர்மிளா பானு ஆகியோர், பலரிடம் "பணம் அனுப்பியிருக்கிறோம், லிங்க் ஒப்புதல் தருங்கள்" என்று கூறி, வாட்ஸ்அப் மூலம் ‘ஜிபே ரெக்வெஸ்ட்’ அனுப்பியுள்ளனர். உண்மையை அறியாத பலரும் அந்த லிங்கை தற்செயலாக ஏற்றுக்கொண்டதால், அவர்களின் கணக்கிலிருந்தே பணம் திருடப்பட்டது.
இதுபற்றி பல புகார்கள் எழுந்ததை அடுத்து, தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் இந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக பணம் சுருட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. மோசடி வழக்கில் கைதான தம்பதியர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்கிறது.
English Summary
Gpay fraud crime lovers kovai