தஞ்சாவூர் || அரசு பள்ளியில் கட்டிட வேலை செய்யும் மாணவர்கள் - மன வேதனையில் பெற்றோர்கள்.!!
govt school student doing construction work in thanjavur
தஞ்சாவூர் || அரசு பள்ளியில் கட்டிட வேலை செய்யும் மாணவர்கள் - மன வேதனையில் பெற்றோர்கள்.!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இங்கு மூன்று வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ளதால், தற்போது இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான முழு நிதியையும் பள்ளியின் முன்னாள் மாணவர் அருள் சூசை என்பவர் மொத்தமாக வழங்கி உதவி செய்துள்ளார்.

இதற்காக வழங்கப்பட்ட நிதியினை வைத்து பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் உள்ள குழுவினருடன் தலைமையாசிரியர் சரவணனும் சேர்ந்து சொந்தமாக வேலைக்கு, நாள் சம்பளத்தில் ஆட்கள் வைத்து தாங்களே முன் நின்று, கட்டட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த கட்டட பணிகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வீடியோ மாணவர்களின் பெற்றோர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால், அரசுப் பள்ளியில் படிக்க அனுப்பும் மாணவர்களை படிக்கவிடாமல் தடுத்து, கட்டட பணிகளுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி வளர்ச்சி குழுவினர் மீது பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
English Summary
govt school student doing construction work in thanjavur