அரசு பள்ளியை சீர்திருத்த நிதியுதவி - ஆளுநருக்கு நன்றி தெரிவித்த கிமமக்கள்..!
governor RN Ravi compensation to govt school in thiruvannamalai
அரசு பள்ளியை சீர்திருத்த நிதியுதவி - ஆளுநருக்கு நன்றி தெரிவித்த கிமமக்கள்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளி சமீபகாலமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி ஆளுநர் ரவியிடம் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அவரது நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை உதவியாக வழங்கியுள்ளார். இந்த நிதியைக் கொண்ட பள்ளிகளின் தரம் விரைவில் மேம்படுத்தப்படும் என்றுத் தெரிகிறது.
இதற்கிடையே அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சேதமடைந்த பள்ளியை சீர் திருத்துவதற்காக நிதியுதவி அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
English Summary
governor RN Ravi compensation to govt school in thiruvannamalai