அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்! நடந்தது என்ன?
government bus seized Public protest
தேனி, ஆண்டிபட்டி அருகே உள்ள பாலச்சமுத்திரம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் ஓடை கட்டி தராததால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கழிவு நீரோடு மழை நீர் தேங்கி நிற்பதால் அதிக அளவில் கொசு உற்பத்தி ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உண்டாகியுள்ளது.
மேலும் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் ஒரு வாரத்திற்கு மேலாக செய்யப்படவில்லை. இது குறித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை பள்ளி மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து மறையலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் பொதுமக்கள் குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
government bus seized Public protest