விவசாயிகளுக்கு நற்செய்தி! நாளை மறுநாள் பாசனத்திற்காக 91 -வது ஆண்டாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிரபலமான அணைகளில் ஒன்று சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை. இது கடந்த 1924 ம் ஆண்டு கட்டதொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமான ஒன்று.

இந்த வழக்கத்தில் மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி, ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இதில் குறிப்பாக அணையில் அதிக தண்ணீர் வந்த காரணத்தால், ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக இதுவரை 11 முறை தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.மேலும், மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை 90 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 91-வது ஆண்டாக குறித்தபடி நாளை மறுநாள் (12-ந் தேதி) பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for farmers Water is being released into Mettur Dam for irrigation 91st time tomorrow


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->