முதல்வருக்கு நன்றி தெரிவித்த தங்க நகை தயாரிப்பாளர்கள்..ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


 சிட்கோ தொழிற்பேட்டையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் கோவை தங்க நகை தொழில் சார்ந்தோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


கோவையை சேர்ந்த கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வருக்கு இன்று, செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாக நன்றி தெரிவித்தனர் 

சென்னைக்கு அடுத்த படியாக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மை நகரமாக கோவை உள்ளது..தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்திய அளவில் முக்கிய நகரமாக மாறி வரும் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை தொழில் சார்ந்த துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்..
இந்நிலையில் கடந்த வருடம் கோவை வந்த முதல்வர் , இந்தியாவின் முதல் தங்க நகை உற்பத்தி பூங்கா கோவையில் அமைக்க உள்ளதாக தெரிவித்த அவர்,இதனை செயல்படுத்த தமிழக அரசு சுமார் 126 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அறிவிப்பு வெளியிட்டார்..

இந்நிலையில் வரும் ஏழாம் தேதி குறிச்சி பகுதியிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் கோவை தங்க நகை தொழில் சார்ந்தோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

.இது குறித்து கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ரகுநாதன் சுப்பையா மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி,சசிக்குமார் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தங்க நகை உற்பத்தி சார்ந்த தங்க நகை பூங்காவில்,நகை பட்டறைகள், ஹால்மார்க் மையம், போன்ற வசதிகள் இருப்பதால் தங்க நகை தொழிலில் கோவை இந்திய அளவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என தெரிவித்த அவர் இதனால் மாநிலத்திற்கு அதிக வரி வருவாய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்…
மேலும் தொழிற்பூங்காவில் தயாரிக்கப்படும் தங்க நகைகளுக்கு அரசு சார்பாக தனி முத்திரை பதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold jewelry makers thanked the Chief Minister Do you know why?


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->