நாளைய சில ரெயில்கள் குறைந்த தூரத்தில் மட்டுமே...!-ரெயில்வே அறிவிப்பு
Some trains tomorrow run only short distances Railways announcement
கரூர் -விரகாக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே பாலம் புதுப்பிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற இருக்கிறது. இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) சில ரெயில்களின் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் பாலக்காடு - திருப்பூர் வழியாக திருச்சிக்குச் செல்லும் காலை 6.30 மணி ரெயில் (எண் 16844), கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் பாலக்காடு ரெயில் (எண் 16843), மாயனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதனையடுத்து, மாயனூரில் இருந்து முன்பதிவு இல்லாத பயணிகளுக்காக சிறப்பு ரெயில் ஒன்று பாலக்காடு வரை இயக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுன்றி,பாலப்பணி முடியும் வரை பயணிகள் சிரமம் ஏற்படாமல் அனைத்து தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Some trains tomorrow run only short distances Railways announcement