HCL ஐடி நிறுவனத்தில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in hcl it company chennai
பிரபல ஐடி நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.
கல்வித்தகுதி:- விண்ணப்பத்தாரர்கள் B.Com, BBA, MBA, M.Com, B.Sc, மற்றும் BCA போன்ற பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா துல்லியம், ஆவணங்களைச் சரிபார்க்கும் திறன், மல்டிபிள் டாஸ்க்கிங், மற்றும் ஒருங்கிணைப்பு திறன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முன் அனுபவம்:- இந்தப் பணிக்கு 0 முதல் 1 ஆண்டு வரை பிபிஓ பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணி யு.எஸ். ஷிப்ட் (US Shift) என்பதால், தேர்வாகும் நபர்கள் இரவுப் பணி பார்க்கத் தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம்:- பணிக்கான சம்பளம் பற்றிய விவரங்கள் இறுதிச் சுற்று நேர்காணலின்போது, விண்ணப்பதாரரின் அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்துத் தெரிவிக்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி :
இந்தப் பணிக்கான நேர்காணல் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
நேர்காணலில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் செல்ல வேண்டும். HCL Tech, Tower 4, Elcot SeZ, Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119.
இந்த வேலைவாய்ப்புக் குறித்து மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும். https://www.linkedin.com/jobs/view/4310138732?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
English Summary
job vacancy in hcl it company chennai