வியாபாரம் முடங்கி விட்டது! -நெல்லையில் கடையடைப்பு எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


நெல்லை நகரத்தில் வரவிருக்கும் அக்டோபர் 7ஆம் தேதி முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை லாரிகள் சரக்குகளை ஏற்ற-இறக்க அனுமதிக்கப்பட்டு வந்தன.

ஆனால் அண்மையில் மாவட்ட கலெக்டர், நகரப் பகுதியில் லாரிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். இதனால் வணிகர்களும், சரக்கு தொழிலாளர்களும் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை வணிகர் சங்கங்கள் இணைந்து அக்டோபர் 7ஆம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, “நாங்கள் அரசை எதிர்க்கவில்லை,வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடுகிறோம்!” என்று வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Business has come standstill Shop closure warning Nellai


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->