ஆன்லைன் விளையாட்டால் மகளுக்கு நேர்ந்த கதி: நடிகர் அக்சய் குமார் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அக்சய் குமார். இவர்  மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு பேசு பொது அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது, அக்சய் குமாரின் மகள் ஆன்லைனில் விளையாடி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை குறிப்பிட்டுள்ளார்.

உலகமெங்கும் இணைய சேவை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் அதிகளவில் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதில் ஏராளமானோர் தெரிந்தும், தெரியாமலும் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் இதனை தைரியத்துடன் முன்வந்து போலீசில் புகார் அளிப்பதுடன், பேட்டிகளும் , சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுக்கின்றனர்.

சிலர் தயக்கம் காரணமாகவும், பயம் காரணமாகவும் வெளியில் சொல்லாமல் மனதில் போட்டு கவலைப்படுவதோடு, மனா அழுத்தத்திற்கு ஆளாகி இறுதியில் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர். இவ்வாறான சூழலில், அக்சய் குமார் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்சய் குமார் பேசியுள்ளார். 

அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருந்ததாகவும், வேறு யாருடனும் விளையாடும் வகையிலான ஆன்லைன் விளையாட்டுகளும் உள்ள நிலையில், அடையாளம் தெரியாத நபர்களுடன் தான் அவ்வாற விளையாட்டை விளையாட முடியும். அப்போது அவர்களிடம் இருந்து குறுஞ்செய்தி வரும் அப்படி தனது மகளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும், அதில், ஒருவர் மகளிடம் நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என கேட்டுள்ளதாகவும், 

 அதற்கு மகள் பெண்ணென்று கூற, இதனையடுத்து அந்த நபர், நிர்வாண படத்தை அனுப்பும்படி தகவல் அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரின் மகள் உடனடியாக விளையாட்டை நிறுத்திவிட்டு தனது மனைவியிடம் கூறியதாகவும், இதுவும் ஒரு வகையில் சைபர் குற்றம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்து பாடத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் பட்னாவிசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று நடிகர் அக்சய் குமார்  பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Akshay Kumar shares shocking information about the tragedy caused by an online game


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->