உருமாறிய 'ஸ்ட்ரேடஸ்' கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் வேகமாக பரவி வருவதால் அச்சம்..! WHO சொல்வது என்ன..?
Fears as mutated Stratus coronavirus spreads rapidly in America
அமெரிக்காவில் கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான 'ஸ்ட்ரேடஸ்' வேகமாக பரவி வருகின்றமை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இந்த 'ஸ்ட்ரேடஸ்' என்பது கொரோனா வைரசின் புது வடிவமாகும். இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி., என பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு கலப்பின வைரஸ் ஆன ஸ்ட்ரேடஸ், நடப்பாண்டு ஜனவரியில் தென்கிழக்கு ஆசியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த வைரஸை கண்காணிக்கப்பட வேண்டிய உருமாறிய வைரஸ்' என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும், ஒப்பீட்டளவில் சுகாதார ஆபத்து என்பது குறைவாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இந்த வைரஸ் தாக்கத்தால், ஏற்கனவே உடல்நல குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சற்று கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த வைரஸ் தற்போது அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், வெர்மான்ட், மிச்சிகன், விஸ்கான்சின், மினிசோட்டா மற்றும் வடக்கு, தெற்கு டகோட்டா போன்ற மாகாணங்களில் வேகமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Fears as mutated Stratus coronavirus spreads rapidly in America