"போர்க்களமான எல்லை": பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது நேரடிப் போர்!
Pakistan Afghanistan Border Crisis Escalating Airstrikes Military Conflict
பிப்ரவரி 6-ல் இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு இப்போது நேரடிப் போர் முனையாக மாறியுள்ளது.
எல்லை மோதலும் உயிர்ச்சேதமும்:
டுராண்ட் கோடு தாக்குதல்: ஆப்கான் எல்லையான டுராண்ட் கோட்டில் தாலிபான்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 19 ராணுவச் சாவடிகள் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. பல வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்: இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ராணுவம் காபூல் மற்றும் காந்தஹார் நகரங்கள் மீது நள்ளிரவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 133 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் தரப்பு கூறுகிறது.
குற்றச்சாட்டுகள்:
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் தாலிபான் போராளிகள் என அந்நாட்டு ராணுவம் கூறினாலும், பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களே அதிகம் எனத் தாலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
நேரடிப் போர் எச்சரிக்கை:
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தத் தாக்குதலைத் தற்காப்பு நடவடிக்கை என நியாயப்படுத்தியுள்ளார். "தாலிபான்களின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டது, இனி நடப்பது நேரடிப் போராக இருக்கும்" எனப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
அண்டை நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் தெற்காசியப் பிராந்தியத்தில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
English Summary
Pakistan Afghanistan Border Crisis Escalating Airstrikes Military Conflict