அரசியல் செய்ய வசதியும், பணமும் தேவை - நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு.!!
actor parthiban say amount must for run political
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், முன்னணி நடிகருமான பார்த்திபன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;-
“தற்போதைய அரசியல் சூழலில் நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. மனதில் வீராப்பும், நல்ல எண்ணமும் இருந்தால் கூட, அதை மட்டும் வைத்துக் கொண்டு இங்கு அரசியல் செய்துவிட முடியாது. அரசியல் என்பது வேறொரு மிகப்பெரிய களம். புதிதாக யார் வந்தாலும் அவர்களை நான் வரவேற்கிறேன்.

யாரோ ஒருவர் மட்டும் ஓடிச்சென்று பதக்கம் வாங்குவதற்கு பதிலாக, ஒரு பெரிய கூட்டமே வெற்றிக்காக ஓடும்போதுதான் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும். நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் கிடையாது. இங்கு போட்டி பயங்கரமாக இருந்தால் தான் வெற்றி நியாயமானதாக இருக்கும் என்பது எனது கருத்து.
கரூரில் நிகழ்ந்த சம்பவத்தைப் போல் இனி எங்கும் நடக்காமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor parthiban say amount must for run political