மேஜிக் காளானால் தலைக்கேறிய போதை.. மயங்கிய காதலி உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு.!! நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதி சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20) தனியார் பள்ளியில் தன்னுடன் பத்தாம் வகுப்பில் பயின்ற ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த நிதி ஏஞ்சல் (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கல்லூரி விடுமுறை தினமான கடந்த சனிக்கிழமை ஆகாஷ் மற்றும் ரித்தி ஏஞ்சல் கோவையில் இருந்து ஊட்டி வந்துள்ளார்.

இருவரும் மது அருந்தியதோடு இரு சக்கர வாகனத்தில் அருகில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்று அங்கு மேஜிக் காளான் எனப்படும் போதை காளானை பறித்து வந்து மதுவுடன் சேர்த்து உண்டுள்ளனர். இதனால் போதையின் உச்சத்திற்கு சென்ற இருவரும் நிலை குலைந்து மயங்கி விழுந்து விடியும் வரை அங்கேயே கிடந்துள்ளனர். காலையில் போதை தெளிந்து எழுந்த ஆகாஷ் நீண்ட நேரமாகியும் ரித்தி எழாதததால்  உடனே ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்.

பின்னர் ‌மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரித்தி ஏஞ்சல் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl died when eat magic mushroomwith alcohol


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->