போலி பங்குச்சந்தை செயலி: ஈரோட்டில் விவசாயியிடம் ரூ.42.25 லட்சம் சைபர் கொள்ளை...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வாட்ஸ்அப் மூலம் நிகழ்ந்த சைபர் மோசடி, விவசாயியை லட்சக்கணக்கில் நஷ்டமடைய வைத்துள்ளது.

செம்பூத்தாம்பாளையத்தைச் சேர்ந்த 44 வயதுடைய விவசாயி ஒருவரை, வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்ட பெண் ஒருவர், பங்குச்சந்தை முதலீட்டில் பெரும் லாபம் கிடைக்கும் என கவர்ந்துள்ளார்.

அவரது பேச்சில் நம்பிக்கை கொண்ட விவசாயி, அந்த பெண்ணின் ஆலோசனைப்படி ஒரு போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

அதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில், தன்னுடைய சேமிப்புத் தொகையாக வைத்திருந்த ரூ.42.25 லட்சத்தை படிப்படியாக முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், முதலீடு செய்த பணத்தை எடுத்துக் கொள்ள முயன்ற போது, அந்த செயலி திடீரென முடக்கப்பட்டிருப்பதைப் பார்த்து விவசாயி அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில், ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த மோசடிக்கு பின்னால் உள்ள மர்ம நபர்களை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fake stock market app Farmer Erode loses 42point25 lakh cyber scam


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->