போன பண்டிகை கொண்டாட்டத்தில் பணம் காணவில்லையே...? ஏன்...? - சீமான் எழுப்பிய அதிரடி கேள்வி
money went missing during last festival celebrations didnt it Why shocking question raised by Seeman
கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் காலத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக சீமான் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.இந்த விசாரணை முடிந்ததும், இந்த வழக்குகள் தொடர்பாக மார்ச் 9-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த சீமான், செய்தியாளர்களை சந்தித்து அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்யும் வகையில் கருத்துகளை வெளியிட்டார்.
அவர் பேசுகையில்,திமுக – அதிமுக இரு கட்சிகளும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை குழப்புகின்றன.ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது இப்போது வழக்கமான அரசியல் நாடகமாகி விட்டது.
அதிமுக – பாமக கூட்டணி எதிர்பார்த்ததே, அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.கடந்த முறை பொங்கல் பண்டிகை சமயத்தில் மக்களுக்கு ரூ.3000 வழங்கப்படாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.சீமானின் இந்த கருத்துகள், அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
English Summary
money went missing during last festival celebrations didnt it Why shocking question raised by Seeman