சேலம் : "நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன்".. நடுரோட்டில் படுத்து உருண்ட சிறுமி -  வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


"நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன்".. நடுரோட்டில் படுத்து உருண்ட சிறுமி -  வைரலாகும் வீடியோ.!

சேலம் மாவட்டத்தில் உள்ள முள்ளிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர்கள் விமல்-அஞ்சலை தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விமல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அஞ்சலை, வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். 

இதற்கிடையே, விமலின் மூத்த மகள் தனது தந்தையும், தாயும் தன்னை அடித்து கொடுமை செய்வதாக கூறி, அழுது கொண்டே பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியிடம் விசாரணை செய்த போது அவர் என்னை வீட்டிற்கு அனுப்பி விடாதீர்கள், தந்தை குடித்து விட்டு வந்து கால்களை கட்டிபோட்டு அடித்து கொடுமை படுத்துகிறார். 

என்னை பள்ளிக்கு அனுப்பாமல் அடிக்கிறார். எனது தாய் வீட்டு வேலை செய்யக்கூறி அடித்து கொடுமை செய்கிறார். அதனால் தன்னை சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் விடுமாறு தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட, அப்பகுதி மக்கள் சிறுமியை அவரது தாயுடன் அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி, தனது தாயிடம் நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கதறி அழுதுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய், சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது, சாலையில் உட்கார்ந்து சிறுமி அழுது புரண்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் இனிமேல் அடிக்கமாட்டேன் என்று சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. 

இந்த வீடியோ தொடர்பாக சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியிடம் விடுதியில் தங்கி படிக்கிறாய்? என்றுக் கேட்டுள்ளனர். அதற்கு சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர், பெற்றோரிடம் இனிமேல் சிறுமியை அடிக்க கூடாது, துன்புறுத்த கூடாது என்றும், சித்ரவதை செய்வதாக இனிமேல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிகை விடுத்துள்ளனர். 

மேலும், கால் ஊனமுற்ற விமலுக்கு அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்குமாறு வலியுறுத்தியும், போக்குவரத்து செலவிற்காக ரூ.500 உதவியும் வழங்கி உள்ளனர். இதையடுத்து சிறுமியை விடுதியுடன் கூடிய பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl crying on the road for will not go to home in salem vedio viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->