#கோவை || விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
Gandhi statue garlanded behalf of vijay Makkal iyakkam
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்க மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற இருப்பதால் தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர்கள் அணி, மாணவர் அணி, வர்த்தக அணி, மகளிர் அணி என அனைத்து அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தையும் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்தி முடிந்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று கோவை கிழக்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சூலூர் காமாட்சிபுரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு கோவை கிழக்கு மாவட்டம் தலைமை தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் அனுபவமிக்க கல்வியாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, வர்த்தக அணி, மகளிர் அணி, சூலூர் ஒன்றியம் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றிய மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
Gandhi statue garlanded behalf of vijay Makkal iyakkam