தமிழகத்தை தாக்க வரும் கஜா புயல்! புயல் வருவதற்க்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டியவை என்ன? படித்துவிட்டு பகிரவும்!!
தமிழகத்தை தாக்க வரும் கஜா புயல்! புயல் வருவதற்க்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டியவை என்ன? படித்துவிட்டு பகிரவும்!!
கஜா புயலின் தற்போதைய நிலைமை குறித்து வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி, நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 580கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 490கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது நாளை மாலை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 80முதல் 120கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நாளை நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கம் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்று தெரிந்துகொள்வோம்.
புயல் தாக்குவதற்கு முன்பு நாம் என்ன செய்வது ?
முதலில் வதந்திகளை நம்பி பயப்பட கூடாது.
செல்போன்களை அடிக்கடி சார்ஜ் வைத்து செய்துகொள்ள வேண்டும்.
வானிலை நிலவரங்கள் குறித்து தொலைக்காட்சி, ரேடியோ, நாளிதழ் மூலம் அவ்வப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தண்ணீர் புகாத இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
செல்லப்பிராணிகளை கட்டி வைக்க வேண்டாம்.
புயலின்போதும், புயலுக்குப்பின்னும் செய்ய வேண்டியவை :
மின்சார மெயின் சுவிட்ச், கேஸ் ஆகிவை அணைக்கவும்.
கதவுகள் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.
வீடு பள்ளமாகவோ அல்லது பாதுகாப்பற்ற இடத்தில் இருந்தாலோ பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.
வானிலை நிலவரங்கள் குறித்து அவ்வப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
சூடு தண்ணீரை பயன்படுத்துங்கள்.
வானிலை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மட்டுமே நம்ப வேண்டும்.
புயலின் போது வெளியில் இருந்தால்....
சேதமடைந்த கட்டிடக்களுக்குள் நுழைய வேண்டாம்.
உடைந்த மின்சார கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.