இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள்... நாகர்கோவிலில் கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் பிரவீன்குமார் (வயது 47). இவர் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகேயிருக்கும் திலகதெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

பிரவீன்குமார் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்த நிலையில்., இதே பகுதியில் இராஜஸ்தானை சார்ந்த லீலா ராம் (வயது 30) என்ற நபர் பேன்சி கடை நடத்தி வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் கடை வைத்திருந்ததை அடுத்து நண்பர்களான நிலையில்., நேற்று முன்தினத்தின் போது இருவரும் இரு சக்கர வாகனத்தில் அங்குள்ள மேலகருப்பு கோட்டைக்கு சென்றுள்ளனர். 

பின்னர் அங்கிருக்கும் பழையாற்றின் கரையில் அமர்ந்து மதுஅருந்திக்கொண்டு இருந்த நிலையில்., பிரவீன்குமார் ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பாதிக்கு சென்ற நிலையில்., இவரது கால் சேற்றில் சிக்கியுள்ளது. 

இதன் காரணமாக வெளியே வர இயலாது தத்தளிக்கவே., அதிர்ச்சியடைந்த நண்பர் லீலா ராம் நண்பரை காப்பாற்ற ஆற்றில் குதித்து இருவரும் நீரில் தத்தளித்து சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். 

பின்னர் இவர்களை தேடி அலைந்து கொண்டு இருந்த நேரத்தில்., இவர்களின் உடல் இன்று மதியம் ஆற்றில் மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

friends died during bath in river in nagarkovil


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->