அப்ரிடி, ஏபிடி சாதனைகள் உடைந்த நாள்...! - 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சரித்திரம்!
day Afridi and AB de Villiers records were broken historic achievement 14year old Vaibhav Suryavanshi
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில், இன்று இந்திய கிரிக்கெட் வரலாறு ஒரு புதிய அத்தியாயத்தை கண்டது. ‘பிளேட்’ பிரிவில் பீகார் – அருணாச்சல பிரதேச அணிகள் மோதிய போட்டியில், 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, வயதை மறக்கச் செய்த ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
பீகார் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ், முதல் ஓவரிலிருந்தே பந்து மழையை எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்பி, அருணாச்சல பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி, மைதானத்தை அதிரவைத்தார். தொடர்ந்து இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதற்குள் சாதனைகள் குவிந்துவிட்டன.இந்த ஆட்டத்தின் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெரும் சாதனையை வைபவ் கைப்பற்றினார்.
இதற்கு முன் 15, 16 வயதில் இருந்த சாதனைகளை எல்லாம் 14 வயதிலேயே அவர் உடைத்தெறிந்துள்ளார்.அதோடு, 36 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தப் பட்டியலில், 35 பந்துகளில் சதம் அடித்த அன்மோல்பிரீத் சிங் முதலிடத்தில் உள்ளார்.
இத்துடன் வைபவின் சாதனை பட்டியல் முடிவடையவில்லை.37 பந்துகளில் சதம் அடித்த ஷாஹித் அப்ரிடியின் சர்வதேச சாதனையையும் அவர் முறியடித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் கவனம் ஈர்த்துள்ளார்.
மேலும், 59 பந்துகளில் 150 ரன்கள் குவித்து, ஏபி டி வில்லியர்ஸ் வைத்திருந்த அதிவேக 150 ரன் சாதனையையும் வைபவ் தகர்த்துள்ளார். இது லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தத்தில், “14 வயதில் 190 ரன்” என்பது ஒரு இன்னிங்ஸ் அல்ல… இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் எழுதிய அறிக்கையே இது.
English Summary
day Afridi and AB de Villiers records were broken historic achievement 14year old Vaibhav Suryavanshi