காதல் வாக்குவாதம் கொலையாக முடிந்த சோகம்…! கனடாவில் இந்திய வம்சாவளி இளம்பெண் சடலமாக மீட்பு...! - Seithipunal
Seithipunal


கனடாவின் டொரோண்டோ மாகாணத்தில் உள்ள மேற்கு வெல்லிங்டன் பகுதி, பரபரப்பான கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஹிமன்ஷி ஹரனா, தனது காதலன் அப்துல் ஹபாரி (32) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மெல்ல மெல்ல வன்முறையாக மாறியுள்ளது. அந்த வாக்குவாதத்தின் முடிவில், அப்துல் ஹிமன்ஷியை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டியவாறே அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஹிமன்ஷியுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தேடுதல் நடத்திய போலீசார், மறுநாள் காலை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ஹிமன்ஷி சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த காட்சியே அப்பகுதியை உலுக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவ இடத்திலேயே தடயங்களை சேகரித்த போலீசார், ஹிமன்ஷியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அப்துல் ஹபாரியை பிடிக்க, கனடா போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இந்த கொடூர சம்பவம், வெளிநாட்டில் வாழும் இந்திய சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragic love argument ends murder Indian origin young woman found dead Canada


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->