விவாகரத்து நோட்டீஸ் ஆத்திரமாக மாறியது… பெங்களூருவில் வங்கிஅதிகாரி கணவரால் சுட்டுக் கொலை!
divorce notice led fit rage Bank officer shot dead by her husband Bengaluru
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) – மகேஷ்வரி (39) தம்பதியினர் 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். இரண்டு குழந்தைகளுடன் 2018 முதல் பெங்களூருவில் வசித்து வந்த இவர்கள், இருவரும் வேலைபார்க்கும் நடுத்தர குடும்பமாக இருந்தனர்.
பாலமுருகன் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், மகேஷ்வரி தனியார் வங்கியில் துணை மேலாளராக இருந்தார்.சமீப மாதங்களில் பாலமுருகன் தனது ஐ.டி. பணியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தன. மனைவியின் நடத்தை குறித்து பாலமுருகன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, மகேஷ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரு ராஜாஜிநகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்த சூழலில், விவாகரத்து கோரி கடந்த வாரம் மகேஷ்வரி நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், ராஜாஜிநகரில் மகேஷ்வரி வசித்து வரும் இடத்தை கண்டுபிடித்தார்
நேற்று மாலை அலுவலகப் பணிமுடித்து வீடு திரும்பிய மகேஷ்வரியை பாலமுருகன் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் அவரை வழிமறித்த பாலமுருகன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
படுகாயமடைந்த மகேஷ்வரியை அப்பகுதி மக்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் பாலமுருகன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
divorce notice led fit rage Bank officer shot dead by her husband Bengaluru