பொதுமக்களுக்கு இலவச நீர், மோர் பந்தல்..MLA அனிபால் கென்னடி தொடங்கிவைத்தார்!
Free water buttermilk pandal for the public MLA Anibal Kennedy inaugurated
புதுச்சேரியில் கோடையின் வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு இலவச நீர், மோர் மற்றும் பழங்கள் போன்றவற்றை ஏம்எல்ஏ அனிபால் கென்னடி விநியோகம் செய்தார்.
புதுச்சேரி, மே 8: கோடை வெப்பத்தில் பொதுமக்கள் உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், இன்று முதல் உப்பளம் தொகுதியில் உள்ள சின்ன மணி கூண்டு அருகில் சிறப்பு நீர் மோர் பந்தல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில துணை அமைப்பாளருமான திரு. அனிபால் கென்னடி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். இதன் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக மோர், குடிநீர், தண்ணீர் பழம், நோங்கு, வெல்லேறி பிஞ்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேவையாக வழங்கப்படும் இந்த முயற்சி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சேவையை பலர் பயன்படுத்திக்கொண்டு, கோடை காலத்தின் தீவிரத்தை சற்று குறைக்கும் நிவாரணமாக அனுபவிக்கின்றனர்.
இந்த சமூக நல திட்டம், வெப்ப அலைகளின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. கோடை கால முழுவதும் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்று சட்ட மன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
English Summary
Free water buttermilk pandal for the public MLA Anibal Kennedy inaugurated