'பணம், நகை தருகிறார்கள்' என ஆசை காட்டி மோசடி...! - மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய நபர் கைது...!
Fraud Perpetrated by Luring Victim Promises Cash and Jewelry Suspect Who Targeted Elderly Woman Arrested
சென்னையில் மூதாட்டிகளிடம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த நபரை வேப்பேரி காவலர்கள் கைது செய்துள்ளனர். சூளை பகுதியைச் சேர்ந்த 76 வயதான காளியம்மாள், கடந்த 17-ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றபோது இந்தத் திருட்டு நடந்துள்ளது.

அங்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், ரமலான் மாதத்தை முன்னிட்டுத் தொழிலதிபர் ஒருவர் ஏழைகளுக்கு நகை மற்றும் பணம் வழங்குவதாகக் கூறி காளியம்மாளை நம்ப வைத்துள்ளார்.
"நீங்கள் நகை அணிந்திருந்தால் அந்த உதவி கிடைக்காது" எனத் தெரிவித்து,மூதாட்டியின் கம்மல் மற்றும் மோதிரத்தைப் பெற்றுக்கொண்டு, கூட்டத்தைப் பார்த்து வருவதாகத் தெரிவித்து தப்பியோடியுள்ளார்.
மேலும், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில், காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சென்னை டி.பி. சத்திரத்தைச் சேர்ந்த திருமலை (50) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்த காவலர்கள், அவரிடமிருந்த 9 கிராம் தங்கக் கம்மலை மீட்டனர்.
இந்த விசாரணையில், இவர் ஏற்கனவே திரு.வி.க நகர் பகுதியிலும் இதே பாணியில் மற்றொரு மூதாட்டியை ஏமாற்றியதும், பல இடங்களில் இது போன்ற கைவரிசையைக் காட்டியதும் அம்பலமாகியுள்ளது.
English Summary
Fraud Perpetrated by Luring Victim Promises Cash and Jewelry Suspect Who Targeted Elderly Woman Arrested