மாமல்லபுரத்திற்கு விசிட் அடித்த முன்னாள் ஜனாதிபதி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னையில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்தார்.

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அவர் பார்வையிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையின் பொழுது கடற்கரை கோவில் நுழைவாயிலில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் அவருக்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.

ராம்நாத் கோவிந்துடன் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், ஆய்வாளர் ருத்ரமாங்கதன், வருவாய் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

பின்னர் அவர் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். அப்பொழுது சுற்றுலாப் பயணிகள் யாரையும் தடுத்து நிறுத்தாமல் ராம்நாத் கோவிந்த் மக்களோடு மக்களாக புராதான சின்னங்களை சுற்றி பார்த்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட சில சுற்றுலாப் பயணிகள் அவருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former President ramnath kovind visited Mamallapuram


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->