சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு.ப.சுப்பராயன் அவர்கள் நினைவு தினம்!.
Former Chief Minister of Chennai Province Mr P Subbarayan Memorial Day
தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு.ப.சுப்பராயன் அவர்கள் நினைவு தினம்!.
பரமசிவ சுப்பராயன் (P. Subbarayan)(செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) நாமக்கல் மாவட்டம் போச்சம்பாளையத்தில், குமாரமங்கலம் ஜமீன்தார் பரமசிவ கவுண்டர் - பாவாயி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலையில், முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலையில், சட்டமும் பயின்றார். சென்னை உயர் நீதிமன் றத்தில், வழக்கறிஞராக பணியாற்றினார்.
தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், 1926ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.
இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்கவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராட்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். தமிழகத்தில், முதன்முதலாக அரசு வேலைகளில் ஆதிதிராவிடர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர்.

இந்திய வானியற்பியலாளர் திரு.மேகநாத சாஃகா அவர்கள் பிறந்ததினம்!.
இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா 1893ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வங்காளதேசத்தில் உள்ள டாக்கா என்னும் நகரில் பிறந்தார்.
இவர் சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது.
புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாஃகா தீவிர சமுதாய நலநோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறுவயது முதல் இருந்தார்.
இவர் 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி தன்னுடைய 62வது வயதில் மறைந்தார்.
English Summary
Former Chief Minister of Chennai Province Mr P Subbarayan Memorial Day