தி.மு.க.கொந்தளிப்புக்கு காரணம்... ஊழலுக்கு ஆர்.என்.ரவி ஒரு தடுப்புச் சுவர்!..அதான்...! - எல். முருகன் கடும் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசிய போது, பல முக்கியமான அரசியல் மற்றும் வளர்ச்சி தொடர்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது,"மேட்டுப்பாளையம்-அவிநாசி 4 வழிச்சாலை பணிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா வளர்ச்சியின் புதிய பரிமாணத்தை கண்டுள்ளது.

மேட்டுப்பாளையத்துக்கு பைபாஸ் சாலை தேவையானது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அமைச்சருடன் நேரடியாக பேசியுள்ளேன்,” என்றார்.அதனைத் தொடர்ந்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்து,“தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தி.மு.க. ஊழல் ஆட்சிக்கு ஒரு பெரிய தடையாக உள்ளார்.

ஆளுநர் எந்தக் கோப்பை மீண்டும் ஆய்வு செய்கிறாரோ, அதற்கே கோபம் கொண்ட தி.மு.க., அவரை எதிரியாக சித்தரிக்கிறது. உண்மையில் அவர் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார்,” என்று தெரிவித்தார்.அவரது பேச்சில் ஊடக சுதந்திரத்தையும் அவர் எடுத்துரைத்து,“தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியாவை அடக்கி ஒடுக்குவதில் தி.மு.க. நிபுணத்துவம் பெற்றுள்ளது. தங்களுக்கு சாதகமாக எழுதினால் ‘நல்லவர்கள்’, எதிராகச் செய்தி வெளியிட்டால் உடனே ‘கெட்டவர்கள்’ என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

இது எமர்ஜென்சி காலத்தை நினைவூட்டுகிறது,” என்றார்.மேலும், கரூர் சம்பவம் குறித்து அவர் தெரிவிக்கையில்,“விசாரணை நடைபெற்று வருகிறது. என்.டி.ஏ. கூட்டணி எம்.பிக்கள் குழு தங்களது அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அறிக்கை வெளியானதும் அதைப் பற்றி விரிவாகப் பேசுவேன்,” என தெரிவித்தார்.இதேவேளை, பா.ஜ.க. வலிமை பெறும் பணிகள் குறித்து அவர் தெரிவிக்கையில்,“தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்ற வாரியாகவும் பா.ஜ.க. பூத் அமைப்புகளை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, வரவிருக்கும் தேர்தல்களில் என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றி உறுதிப்படுத்தப்படும்,” என்றார்.இந்த நிகழ்வில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கரு. மாரிமுத்து, நீலகிரி மாவட்ட தலைவர் தர்மண், ஈரோடு வடக்கு தலைவர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், பொது செயலாளர் விக்னேஷ், விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார் சாமிநாதன், காரமடை நகர தலைவர் சதீஸ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கே.ஆர்.எஸ். சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reason DMK turmoil RN Ravi barrier corruption thats it L Murugan strong accusation


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->