பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய சமுதாய கூடம்..பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்!
In the Member of Parliament Constituency Development Fund the minister has inaugurated the construction of a new community hall
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாய கூடம் அமைக்கும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்.
வேலூர் மாவட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று காட்பாடி, செங்குட்டை பகுதியில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாய கூடம் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் விழா மேடை அமைப்பதற்கான பணிகளை அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி. அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த். வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார். துணை மேயர் சுனில் குமார். மாநகராட்சி ஆணையாளர் இரா. லெட்சுமணன், பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் சுடலைமுத்து. ஒன்றியக்குழுத் தலைவர் துணைத்தலைவர் . சரவணன். 4 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சித்ரா லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
In the Member of Parliament Constituency Development Fund the minister has inaugurated the construction of a new community hall