சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி..MLA அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி உப்பளத்தில் ரூ.11.5 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வாய்க்கால் பணிகளை அனிபால் கென்னடி ஏம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் உள்ள உடையார் தோட்டத்தில் ரூ.11.5 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இந்தப் பணிகளை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது அப்பகுதியில் உள்ளே  6 வீடுகளில் வசிப்போர் , தற்போதைய சாலை வழி தவிர மேலும் சாலை ஏற்படுத்தும்படி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து சாலை விரிவாக்க பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதன்படி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கூடுதல் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. அதன் தொடக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் உடன் இருந்து  துவக்கி வைத்தார். இப்பணிகள் நடைபெறும் மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உடன் நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், திமுக அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், கிளை செயலாளர்கள் சந்துரு, ராகேஷ், சகோதரர் சதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Formation of roads and canals MLA Anibal Kennedy inaugurated


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->