வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்..அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!
Foreign language professional courses are mandatory Anna University information
நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 300 என்ஜினீயரிங் இணைப்பு கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான கல்வி விதிமுறைகள்-2025-ஐ அண்ணா பல்கலைக்கழக கல்வி கவுன்சில் சமீபத்தில் அங்கீகரித்து இருக்கிறது.அதுமட்டுமல்லாமல் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் டச்சு ஆகிய வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய கல்வி விதிமுறைகள் நடப்பு கல்வியாண்டில் இருந்து முதல் 2 செமஸ்டர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளன என தெரிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் . புதிய விதிமுறைகளின்படி, பி.இ., பி.டெக். மாணவர்களுக்கும் வெளிநாட்டு மொழி, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன.
தன்னாட்சி அதிகாரம்பெற்ற கல்லூரிகள் ஏற்கனவே வெளிநாட்டு மொழி படிப்புகளை வழங்கி வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இணைப்பு கல்லூரிகளுக்கு இதை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய விதிமுறைகள் பி.இ., பி.டெக். படிப்புகளின் முதல் 2 செமஸ்டர்களில் காப்புரிமை தாக்கல், தொழில் பாதுகாப்பு விதிமுறைகள், வெல்டிங் செயல்முறைகள், மின்னணு கூறுகள் போன்ற வாழ்க்கைத் திறன் படிப்புகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 3-வது செமஸ்டர் முதல் 5-வது செமஸ்டர் வரையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு படிப்புகளை கல்லூரிகள் வழங்கலாம் எனவும், மாணவர்கள் எந்த ஒரு ஆன்லைன் படிப்புகளை தொடரலாம் எனவும் இந்த புதிய விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன.
English Summary
Foreign language professional courses are mandatory Anna University information