சைபர் க்ரைம் புகார்..வேலூர் மாவட்டத்தில் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 பணம் உரியவர்களிடம் ஒப்படைப்பு! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து,உரியவர்களிடம் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 மீட்டுத்தரப்பட்டது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  அண்ணாதுரைஇணையவழி குற்ற பிரிவு மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான வழிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, சைபர் க்ரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில்,
KYC/PAN Card புதுப்பித்தல், ATM/Credit Card செயலிழப்பு, குறுஞ்செய்தி/வாட்ஸ்அப் மூலம் தெரியாத நபரிடமிருந்து பெறப்பட்ட லிங்க், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பரிசுக் கூப்பன், ஆன்லைன் கடன் செயலி, சமூக வலைதளவிளம்பரங்கள், Crypto/Bitcoin/Stock Market முதலீடுகள், ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் பகுதி நேர வேலை, பள்ளி/கல்லூரி ஊக்கத்தொகை, ஆன்லைன் சூதாட்டசெயலிகள் போன்ற பல்வேறு இணையவழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்,மருத்துவர், தொழில்துறை பிரிவினர், தொழிலதிபர்கள், அரசு மற்றும் அரசு அல்லாத துறை பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு துறையில்பணியாற்றுபவர்களின் புகார்கள் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில், கடந்த ஜீலைமாதம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம்
போலீசார், துரித நடவடிக்கையின் மூலம் 19 வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு,  அவர்கள் இழந்த ரூ.45,83,671/- (நாற்பத்து ஐந்து இலட்சத்து எண்பத்துமூன்றாயிரத்து அறநூற்றி எழுபத்தியோறு ரூபாய்) பணத்தை மீட்டு, உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சைபர் குற்றங்களை யாரேணும் சந்திக்க நேர்ந்தால், கால தாமதமின்றி உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைத்தோ அல்லதுhttps://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களின் புகார்களை பதிவு செய்யலாம் என்பதை வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையின் சார்பாகதெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyber crime complaint In Vellore district an amount of Rs. 4583671 was handed over to the rightful owners in 19 cases


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->