ஆப்பு மேல ஆப்பு..! 50 சதவீதம் வரி விதித்து டொனால்ட் ட்ரம்ப் அதிரடி: கதிகலங்கி போயுள்ள இந்தியா..!
Donald Trump takes action by imposing 50 percent tax on India
உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. இதனால், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடன் கூடுதலாக வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதலாக அபராதம் விதிப்பதாகவும் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
அதனபடி, குறித்த வரி விதிப்பு ஆகஸ்ட் 01 முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு பிறகு ஆகஸ்ட் 07-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, நேற்று டிரம்ப் அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை கணிசமாக அதிகரிக்க அதிகரிக்க போவதாக கூறியிருந்தார். அடுத்த24 மணி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ளும்படி இந்தியாவிற்கு காலக்கெடு விதித்து நெருக்கடி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது, இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்ட வரி மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்தியா கதிகலங்கி போயுள்ளது.
English Summary
Donald Trump takes action by imposing 50 percent tax on India