பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்...! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிஜோன் மண்டல் என்பவர் மற்றும் இவரது மனைவி 27 வயது மந்திர் மண்டல். இந்த தம்பதிக்கு திருமணமாகி 8  ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 6 வயதில் மகன் உண்டு.

இதில் பிஜோன் மண்டல் தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூரு புறநகர் ஹெப்பகோடி காவல் எல்லைக்குட்பட்ட திருபாளையாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில்,பிஜோன் மற்றும் அவரது நண்பர் 28 வயது சுமன் மண்டல் இவரும் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே,பிஜோனும், மனைவி மந்திரும் குடும்ப தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இதில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பிஜோனும், சுமனும் வேலைக்காக அந்தமானுக்கு சென்றனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை மந்திரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த சுமன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மந்திரின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் மந்திர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுமன், வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்ததும் ஹெப்பகோடி காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான மந்திரின் உடல் மற்றும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தில் என்ன காரணத்திற்காக சுமன், மந்திரை கொன்றுவிட்டு தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man who strangled woman death and then committed suicide by hanging himself


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->