விவசாயிகள் நலனைக் காக்க எந்த விலை கொடுக்கவும் தயார் - பிரதமர் மோடி..!!
prime minister modi speech about farmers
தலைநகர் டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"உலகம் முழுவதும் இன்று, பல்லுயிர் பெருக்கம் பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன. அரசுகளும் அதைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் டாக்டர். சுவாமிநாதன் ஒரு படி மேலே சென்று உயிரியல் மகிழ்ச்சி என்ற கருத்தை வழங்கினார். இன்று, இந்த யோசனையையே நாங்கள் இங்கு கொண்டாடுகிறோம்.

பல்லுயிர் பெருக்கத்தின் வலிமையுடன், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர். சுவாமிநாதன் கூறுவார். எம்.எஸ். சுவாமிநாதனை சந்திப்பது ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக இருந்தது. இன்றும் எம்.எஸ் சுவாமிநாதனின் கருத்துக்கள் இந்திய விவசாயத் துறையில் காணப்படுகின்றன. அவர் உண்மையிலேயே அன்னை பாரதியின் ரத்தினம்.
அதுமட்டுமல்லாமல், பேராசிரியர் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கும் வாய்ப்பு நமது அரசுக்குக் கிடைத்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
விவசாயிகள் நலனை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது. நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
prime minister modi speech about farmers