யஸ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்...! - Seithipunal
Seithipunal


கடந்த மாா்ச் 14-ந்தேதி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக 'யஷ்வந்த் வா்மா' பதவி வகித்தபோது அவரது அரசு இல்லத்தில்  தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தீயணைப்பு வீரர்களால் கண்டறியப்பட்டது.இதுகுறித்து அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது.

அவ்வகையில்,யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து ஜனாதிபதி திரவுபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.இந்த சா்ச்சையை தொடா்ந்து, அலகாபாத் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியில் இருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் பாராளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து தன்னை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது,"அப்போதைய தலைமை நீதிபதியும் விசாரணைக் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்றுவது அவசியமில்லை என்று கருதப்பட்டது, அதிலும் குறிப்பாக அந்த நேரத்தில் எந்த ஆட்சேபனையும் மனுதாரரால் எழுப்பப்படவில்லை.ஜனாதிபதி, பிரதமருக்கு விசாரணை அறிக்கையை அனுப்புவது அரசியலமைப்புக்கு விரோதமானது அல்ல" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court judges dismiss Yashwant Vermas petition


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->