கூலி படத்தில் என் கேரக்டர் ஈஸ்ட்ரோஜன் மாதிரி...! - நடிகை ஸ்ருதிஹாசன்
character movie Coolie like estrogen Actress Shruti Haasan
நடிகர் சூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்த்' மற்றும் 'லோகேஷ் கனகராஜ்' இருவரும் இணைந்து உருவாக்கிய படம் ''கூலி'' . இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்,நாகார்ஜுனா,அமீர் கான்,சபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இதன் காரணமாக இப்படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு ஏகபோகமாக உள்ளது.இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை 'ஸ்ருதிஹாசன்', "கூலி படத்தில், என் கதாபாத்திரம் கொலை செய்யப்படுமா?, நான் சண்டையிடுவேனா?, என ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்.
இந்த படத்தில் நான் சண்டையெல்லாம் போடவில்லை. ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜின் மகளாக நடித்துள்ளேன். இதன் படத்தின் கதையை கேட்டபோது, எனது கதாபாத்திரத்தை அதிகமான பெண்கள் தொடர்புப்படுத்தி கொள்ளும்படி இருக்குமென தோன்றியது.
இந்த படம் டெஸ்டோஸ்டிரோன் நிறைந்த உலகமாக இருக்கும். ஆனால் நான் அதில் ஆரோக்கியமான ஈஸ்ட்ரோஜனாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
character movie Coolie like estrogen Actress Shruti Haasan