ஹீரோவாக அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன்...!
Sivaji Ganesans grandson debut hero
நடிகர் திலகம் 'சிவாஜி கணேசன்' அவர்களின் மற்றொரு பேரன் ''தர்சன் கணேசன்'' என்பவர் தற்பொழுது தமிழ் திரையுலகில் HERO -வாக அறிமுகமாக உள்ளார்.இவர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் 2 -வது மகனாவார்.

இவர் நடித்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், தற்போது படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழு யார் என்ற தகவல் சீக்கிரமாக வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.மேலும், ராம் குமாரின் மூத்தமகனான துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார்.
மேலும் நடிகர் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு ஏற்கனவே கதாநாயகனாக தமிழ் திரையுலகில் களமிறங்கி பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அவ்வரிசையில் தர்சன் கணேசனும் இணைவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary
Sivaji Ganesans grandson debut hero