இணையத்தை தெறிக்கவிடும் ரெட்ட தல படத்தின் டீசர்.!!
retta thala movie teaser released
'மான் கராத்தே' பட இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரெட்ட தல'. இந்தப் படத்தில் அருண் விஜயின் ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி நடித்துள்ளார்.
மேலும் இந்தப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம். சி.எஸ் இசையமைக்கும் இந்தப் படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார். இந்த நிலையில் ரெட்ட தல படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அதனை இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். இந்த டீசரில் அருண் விஜய் கெட்டப் அட்டகாசமாக உள்ளது.
அருண் விஜய் சமீபத்தில் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் நடித்திருந்தார். மேலும், தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
English Summary
retta thala movie teaser released