ஹாலிவுட் லெவல் டச்! வைரலான பிட்ஸ்! - ஹோகுடோ கோனிஷியுடன் அல்லு அர்ஜுன் & அட்லீ கூட்டணி
Hollywood Level Touch Viral Bits Allu Arjun Atlee team up Hokuto Konishi
‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், மாஸ் ஹிட் படங்களுக்காக பெயர் பெற்ற இயக்குனர் அட்லீயுடன் கைகோர்த்து தனது அடுத்த பிக்-பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது தற்காலிகமாக ‘AA22xA6’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோன் ஹீரோயினாக இணைந்துள்ளார்.

மேலும் படம் தற்போது அதிவேகமாக படப்பிடிப்பு கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. மும்பையில் நடைபெற்ற முக்கியமான படப்பிடிப்பு கட்டம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது முழுக் குழுவும் அபுதாபியில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், ஜப்பான்-பிரிட்டிஷ் நடனக் கலைஞரும் புகழ்பெற்ற நடன இயக்குனருமான ஹோகுடோ கோனிஷிவுடன் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும், ஹோகுடோ கோனிஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படத்துக்காக பணியாற்றுவதில் ஏற்பட்டுள்ள தனது பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் பின்னணிக் காட்சிகள் (BTS stills) பகிர்ந்துள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
English Summary
Hollywood Level Touch Viral Bits Allu Arjun Atlee team up Hokuto Konishi