இந்தியாவில் ஏ.ஐ புரட்சி தொடக்கம்: கூகுள் 15 பில்லியன் டாலர் முதலீடு! விசாகப்பட்டினம் இனி உலக தர தொழில்நுட்ப மையம்...! -சுந்தர் பிச்சை
AI revolution begins India Google invests 15 billion Visakhapatnam now world class technology hub Sundar Pichai
ஏ.ஐ உச்சி மாநாட்டில் உரையாற்றிய கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவுடன் தனது ஆழமான நெருக்கத்தை உணர்ச்சிகரமாக பகிர்ந்து கொண்டார்.
“இந்தியாவுக்கு மீண்டும் வருவது எப்போதும் எனக்கு ஒரு சிறப்பு அனுபவம். ஒவ்வொரு முறை வரும்போதும், நாட்டின் வளர்ச்சி வேகமும் மாற்றத்தின் தீவிரமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.

தன் மாணவர் கால நினைவுகளை மீட்டுக் கொண்ட அவர், ஐ.ஐ.டி கரக்பூர்-ல் படித்த காலத்தில் சென்னையிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி பயணம் செய்ததாக தெரிவித்தார்.
அந்த ரெயில் விசாகப்பட்டினம் வழியாகச் சென்றது என்றும், இன்று அதே நகரம் உலகத் தரத்திலான தொழில்நுட்ப மையமாக உருவெடுக்க இருப்பது பெருமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அந்த நகரத்தில் கூகுள் நிறுவனம் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் மிகப்பெரிய ஏ.ஐ மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த மையத்தில் ஜிகாவாட் அளவிலான கணினி திறன், அதிநவீன தரவகங்கள் மற்றும் புதிய சர்வதேச நீர்மூழ்கிக் கேபிள் நுழைவாயில் போன்ற வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, அதிநவீன ஏ.ஐ தொழில்நுட்பத்தை எளிதில் பயன்படுத்தும் வாய்ப்பையும் வழங்கும்.
மேலும், ஏ.ஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பணியாளர்களின் பணிமுறைகளை முற்றிலும் மாற்றி, புதுமையான தொழில்களையும் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
AI revolution begins India Google invests 15 billion Visakhapatnam now world class technology hub Sundar Pichai